அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றவேண்டாம்

பதற்றமான சூழல் நிலவும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றவேண்டாம் என ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறுவதை நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ள ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் Heiko Maas, ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும் அமெரிக்காவில் பதற்றமான சூழல் நிலவும் இந்த நேரத்தில், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


அத்துடன், டீசன்டாக தோற்பவர்கள் ஜனநாயகத்தை தாங்குவதற்கு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.


அமெரிக்கா என்பது வெறும் one-man show அல்ல என்று கூறியுள்ள Maas, சரியான முடிவு வரும் வரையில் அமைதியாக இருப்பதற்கான நேரம் இது என்று கூறியுள்ளார்.


தேர்தல் முடிவுகள் வெளியான உடனே, அமெரிக்காவால் மீண்டும் சர்வதேச மேடைக்கு முழு ஆற்றலுடன் இப்போதைக்கு திரும்ப இயலாது என்று கூறியுள்ள அவர், அமெரிக்காவை உலகம் ஒழுக்கத்தின் சக்தியாகத்தான் பார்க்கவிரும்புகிறதேயொழிய, குழப்பத்தின் காரணியாக அல்ல என்கிறார்

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares