பிரதான செய்திகள்

அமீர் அலிக்கு முதலமைச்சர் ஹாபீஸ் பதில் சொல்லதேவையில்லை

பிரதியமைச்சர் அமீர் அலிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பதிலளிக்க வேண்டிய எந்த தேவையுமில்லை என கல்குடா தொகுதியின் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞரணி அமைப்பாளர் லியாப்தீன் தெரிவித்துள்ளார்.

 

கல்குடாத் தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் இளைஞரணி உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்குடாத் தொகுதியில் கடந்த 13 வருடங்களாக பிரதியமைச்சர் அமீர் அலி செய்யாத சேவைகளை தான் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பதவியேற்று இரண்டு ஆண்டுகளில் செய்து முடித்து வருகிறார்.

இதனால் அவருக்கு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. இதனால் கோமாளித்தானமாக அறிக்கை விட்டும், சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை கூறியும் பிரதியமைச்சர் அமீர் அலி மக்கள் எள்ளி நகைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கிழக்கு முதலமைச்சர் கோவைகளில் அபிவிருத்திகளைக் காட்டுவதாக பிரதியமைச்சர் குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார். நேர்மையாகவும், நியாயமாகவும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளே அதன் நிதியொதுக்கீடுகள் மற்றும் செலவீனங்களுடன் ஆவணப்படுத்தப்படுகின்றன.

இதுவரை எமது பகுதியில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வொன்றை பெற்றுத் தர முடியாத பிரதியமைச்சர் அமீர் அலி, கிழக்கு முதலமைச்சரை வசைபாடவே பயன்படுத்துகின்றமை அவருக்கு வாக்களித்த மக்களுக்கே தலைகுனிவை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.

Related posts

பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை

wpengine

பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை

wpengine

ஜே.வி.பி கட்சித் தலைமையில் மீளவும் மாற்றம்!

wpengine