அப்ரிடி ஒரு பைத்தியம்: திட்டித் தீர்த்த பாகிஸ்தான் நடிகை

இந்திய அணியுடனான தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடியை அந்நாட்டு நடிகை ஒருவர் பைத்தியம் என்று திட்டித் தீர்த்துள்ளார்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை குவான்டீல் பலூச் என்பவர் சில தினங்களுக்கு முன்பு இந்திய பிரதமர் மோடியை அவமரியாதையாகப் பேசியும், மிரட்டல் விடுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆசியக்கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோற்றதை அவர் விமர்சித்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் ஏற்கனவே கூறினேன். இந்த மாதிரி ஒரு பைத்தியத்தை அணியின் தலைவராக வைத்துக் கொண்டு நாம் எதையுமே வெல்ல முடியாது.

விரைவில் டி20 உலகக்கிண்ணம் வேறு வருகிறது. இந்த நிலையில் நமது அணியின் நிலையைப் பாருங்கள். எனக்கு அவமானமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares