அப்துல் கலாம் பெயரைப் பயன்படுத்த பொன்ராஜ் கட்சிக்குத் தடை!

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பெயரைப் பயன்படுத்த பொன்ராஜ் கட்சிக்குத் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றிய பொன்ராஜ், அப்துல் கலாம் லட்சிய இந்திய கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில், அரசியல் காரணங்களுக்காக அப்துல் கலாமின் பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி அவரது சகோதரர் முகமது முத்து மீரான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், அப்துல் கலாம் எந்த அரசியல் கட்சிகளையும் சாராதவர். எனவே அரசியல் கட்சிகள் அவரது பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், அப்துல் கலாமின் பெயரை பொன்ராஜ் கட்சி பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இதுகுறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் வரை தடை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares