அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

அன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று வெளிநாட்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்…

தரவு கட்டமைப்பு முகவர் நிலையத்தை ஸ்தாபித்தால் தரவுகள் வெளிநாடுகளுக்கு  வழங்கப்படும் என்று கடந்த காலங்களில் குற்றஞ்சாட்டியவர்களே அது தவறு என்று தற்போது குறிப்பிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தரவு கட்டமைப்பை எவராலும் திருட முடியாது. அரச கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் டிஜிட்டல்  பொருளாதார அமைச்சு மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது:

டிஜிட்டல் பொருளாதார கொள்கைத் திட்டங்களை அரசாங்கம் உருவாக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. இருப்பினும் அரசாங்கத்தின் கொள்கைக்கும் இலக்குக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. டிஜிட்டல்  பொருளாதாரத்தின் ஊடாக 15 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிக்கொள்ள  எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கான திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை.

வரி இல்லாமலேயே  டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக 1 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வது  சவால்மிக்கதாக காணப்படுகின்ற நிலையில் வரி கொள்கைகளுடன் எவ்வாறு 15 பில்லியன் டொலர் என்ற இலக்கை அடைவது என்பதும் சவால்மிக்கது.

இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் தரவு பாதுகாப்பு முகவர் நிலையத்தை அமைப்பதற்கு எமது அரசாங்கத்தில் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.  தரவு முகவர் நிலையத்தை அமைப்பதால் நாட்டின் உள்ளக தரவுகள் வெளிநாடுகளுக்கு  வழங்கப்படும் அல்லது திருடப்படும் என்று தற்போதைய அரசாங்கம் தான் அப்போது வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டது.

அன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று  வெளிநாட்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்  தரவு பாதுகாப்பு முகவர்  நிலையத்தை  அமைப்பதற்கு  தீர்மானித்துள்ளனர். ஆகவே அன்று குறிப்பிட்டது தவறு என்று இன்று குறிப்பிடும் நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

 தரவு பாதுகாப்பு முகவர் நிலையத்தை அமைத்து, சட்ட பாதுகாப்பை வலுப்படுத்தினால் தரவுகளை  மோசடி செய்ய முடியாது. ஆகவே, தரவு பாதுகாப்பு முகவர் நிலையத்தை அமைப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அரச சேவை மற்றும்  நீதிமன்ற கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய:https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg

Related posts

மன்னார் மாவட்ட புதிய மறை மாவட்ட ஆயர் நியமனம்

wpengine

பசீர் சேகுதாவூத் தலைவர் ஹக்கீமுக்கு எதிராகவே! செயற்பட்டார்.

wpengine

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பிரமுகர்களுடனான சந்திப்பு

wpengine