செய்திகள்பிரதான செய்திகள்

அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நினைவுச் சிலை.!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் கொள்கை வகுப்பாளராகவும் தத்துவாசிரியராகவும் இறுதி வரை செயற்பட்ட மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நினைவுச் சிலை அமைக்கப்படவுள்ளது.

அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு சிலையை நிறுவும் பணியை பிரான்ஸ் தமிழ் பண்பாட்டு வலயம் கார்த்திகை 27 சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பரீஸின் புறநகரான மொண்டி பூங்காவில் அன்ரன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு அனுமதியை மொண்டி நகர சபை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான அடிக்கல் கடந்த 12ஆம் திகதி பாரிஸ் புறநகர் பகுதியான மொண்டியில் நாட்டப்பட்டது.

மொண்டி நகர முதல்வர் ஸ்ரீபன் அர்வில் மற்றும் நகர சபை உறுப் பினர்கள் அன்ரன் பாலசிங்கத்தின் சிலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(ஆதவன்)

Related posts

அரசாங்கத்தையோ அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தையோ இனியும் நம்ப முடியாது.

wpengine

தமிழ் பயங்கரவாதம், இஸ்லாம் அடிப்படைவாதம் தலைதூக்க இடமளிக்காது

wpengine

காதீ நீதி மன்றத்தை அவமதித்தவருக்கு நீதி மன்ற பிடியானை

wpengine