அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

அனைத்து சபைகளிலும் அதிகூடிய ஆசனங்களைப் பெறுவோம் – நம்பிக்கை தெரிவித்த ரிசாட் MP.

மன்னார் தாராபுரம் அல் மினா மகா வித்தியாலயத்தில் தனது வாக்கினை செலுத்திய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன்.  

மேலும் அவர் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு வரும் நிலையில், அனைத்து சபைகளிலும் அதிகூடிய ஆசனங்களைப் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதென தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு வரும் நிலையில் அனைத்து சபைகளிலும் அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுக்கொள்வோம்.

மன்னார் மாவட்டத்தில் இம்முறையும் சுமுகமான முறையில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருவகின்றன. 

அதேவேளை தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் யாருடன் இணைந்து ஆட்சி அமைப்பது அல்லது யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கலந்தாலோசிக்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

Related posts

முஸ்லிம் ஜனாஷாவை அடக்கம் செய்வதை கைவிடவேண்டும்.

wpengine

சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிக்க நவீன பொறிமுறை தேவை- அமீர் அலி

wpengine

பொஸ்னியா இனப்படுகொலை! இராணுவ தளபதி விஷம் குடித்து தற்கொலை

wpengine