பிரதான செய்திகள்

அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனம் ஜனாதிபதிக்கு கடிதம்

கரும்பு தோட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட வாய்ப்பை வழங்குமாறு, அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கூறியுள்ளதாக, அந்த சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஹிகுரான, பொல்வத்தை, செவனகல ஆகிய பகுதிகளிலுள்ள சீனி தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் கந்தளாய் சீனி தயாரிக்கும் தொழிற்சாலை செயற்படாதுள்ளமையால் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ள போதும், உரிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி தலையிட வேண்டும் எனவும் அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

மோட்டார் சைக்கில்கள் மீண்டும் இறக்குமதி, விலை கிட்டத்தட்ட்ட 10 இலட்சம் ரூபாய் . !

Maash

48மணி நேரம் தேனிலவு! மனைவியை பறிக்கொடுத்த கணவன்

wpengine

இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் இன்று முதல் விநியோகம்!

Editor