அனுராதபுரத்தில் கட்சி பணிகளை முன்னெடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர்

(மூத்த போராளி)

2016.03.19 ஆம் திகதி பாலமுனையில் இடம்பெற இருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு வெற்றிகரமாக இடம்பெறும் வகையில் நாடு பூராவும் இருந்து போராளிகள் பெருமளவில் வருகைதர உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் ஒரு கட்டமாக அனுராதபுர மாவட்ட போராளிகளையும் முக்கியஸ்தர்களையும் மாநாட்டிற்கு வருகைதர நேரடியாக அழைக்கும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் நேற்று ஹொரவபொத்தானை , 100 ஏக்கர், வீரச்சோலை, பத்தாவ, ஆணையுளுந்தான், கிவுலக்கட போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார்.12800128_1591010567851484_3261519573609766737_n

குறித்த பிரதேச முக்கியஸ்தர்களும், போராளிகளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் எதிர்கால திட்டங்கள், நடவடிக்கைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களுடன் கலந்துரையாடினர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அவர்களையும் தேசிய மாநாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களினால் பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரமே இவ்விஜயம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்றும் பாராளுமன்ற உறுப்பினர் பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.12512270_1591010521184822_5048287074290421569_n

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares