அனர்த்த நிலைமை பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

நாட்டில் ஏற்பட்டுள்ள அனரத்த நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பிற்பகல் 1 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

அனர்த்த நிலைமைகள் தொடர்பில் பேச்சுவார்ததை ஒன்று அவசியம் என்பதை கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தௌிவுப்படுத்தியிருந்தார்.

மேலும் பல கட்சி தலைவர்களின் ஆலோசனைக்கமைய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வௌியானமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares