பிரதான செய்திகள்

அந்தமான் தீவுப்பகுதியில் புயல்! இலங்கையினை தாக்குமா

வங்கக் கடலில் அந்தமான் தீவுப் பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ளதாகவும் இதனால் சென்னை உட்பட பல பகுதிகள் பாதிப்படையும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்றைய தினம் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடைந்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால், சென்னை, நெல்லூர் மற்றும் ஒடிசா என எந்த திசையிலும் கடக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இதன் காரணமாக புதுச்சேரி தொடக்கம் சென்னை வரையிலும், ஆந்திராவின் தெற்கு பகுதி கடற்கரைகளிலும் கன மழை பொழியும் சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், குறித்த புயல் தொடர்பிலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பிலும் எதிர்வரும் 10ஆம் திகதியே இறுதித் தகவல்கள் வெளிப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் போன்ற பகுதிகளில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கடும் பாதிப்புகள் ஏற்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இதனது தாக்கம் இலங்கையில் இருக்குமா என்பது தொடர்பில் இலங்கை வானிலை ஆய்வாளர்கள் எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை.

Related posts

முஸ்ஸிம் மக்களையும் சந்தேக கண்ணுடன் பார்ப்பது தவறு

wpengine

மன்னாரில் “இணைந்த கரங்கள்” அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Editor

வடக்கில் தனியார் சுகாதார சேவைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!

Editor