அத்துமீறும் வடமாகாண அரசியல் இனவாதிகள்: சாடுகிறார் விமல்

வடக்கு கிழக்கை இணைப்பதாகவும் தமிழ் மக்களை சுயாதீன ஆட்சிக்குள் கொண்டு வருவதாகவும் கூறி சில தமிழ் இனவாதிகள் செயற்படுவதாவும், அதை தடுக்க முடியாத இடுப்பில்லாத அரசாங்கமே தற்போது உள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், வடமாகாண இராணுவ முகாம்களுக்குள் சில அரசியல் வாதிகள் அத்துமீறி நுழைந்து பலவந்தமாக இராணுவப் படை அமைந்துள்ள நிலப்பரப்பு பற்றிய தகவல்களை சேகரிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளை தடுக்கமுடியாத அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது. இவர்களுக்கு ஆட்சியை நடத்த தெரியவில்லை, உங்களுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை என்றால் “ஐயோ கடவுளே” எனக் கூறி ஆட்சியை எங்களிடம் தாருங்கள் என விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மேலும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விமல் வீரவன்ச தொடர்ந்தும் பதிலளிக்கையில்,

வருமானம் இல்லை எனக் கூறி சில நிறுவனங்களை தனியார் துறைக்கு அரசாங்கம் விற்கின்றது. ஆனால் இலாபம் கிடைப்பதனாலேயே தனியார் துறையினர் குறித்த நிறுவனத்தை வாங்குகிறார்கள் என்ற சிறு விடயத்தைக்கூட தெரிந்துகொள்ள முடியாத அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கமா? என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares