அத்தியாவசிய உலர் உணவுக்காக மாதாந்த சம்பளம் ஒதுக்கீடு

மன்னார் நகர சபை உறுப்பினர்களின் ஒரு மாத கொடுப்பணவு மக்களின் அத்தியாவசிய உலர் உணவு தேவைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மன்னார் நகர சபையின் 25 ஆவது அமர்வு நேற்று காலை 10.30 மணியளவில் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்றது.


இதன் போது மன்னார் நகர சபையின் தலைவர்,உப தலைவர், உறுப்பினர்கள் இணைந்து தங்களுக்கான ஒரு மாத கொடுப்பனவை மக்களுக்கான அத்தியாவசிய உலர் உணவு தேவைகளுக்காக வழங்கி வைப்பதாக தீர்மானம் மேற்கொண்டனர்.


மேலும் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டச் செயலகத்தில் அவசர கலந்துரையாடல் இடம் பெற்று வருகின்ற போதும் மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் நகர சபையின் செயலாளர் அழைக்கப் படுவதில்லை.


தேர்தல் காலம் என்பதினால் நகர சபையின் தலைவரை அழைக்காது விட்டாலும் நகர சபையின் செயலாளரையும் அழைப்பது இல்லை.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் குறித்த செயற்பாடு குறித்து சபை உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, கண்டன தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.


தொடர்ச்சியாக அரசாங்க அதிபர் இவ்வாறு செயற்படும் பட்டசத்தில் அரசாங்க அதிபருக்கு எதிராக சபை உறுப்பினர்கள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் மன்னார் நகர சபையின் அனுமதி இன்றி தொடர்ச்சியாக நகர சபை பகுதியில் மரக்கறி வியாபாரம் இடம் பெற்று வருகின்றது.


இனி வரும் நாட்களில் குறித்த மரக்கறி மற்றும் ஏனைய வியாபர நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க உள்ளதோடு,மன்னார் நகர சபையில் ஏற்கனவே வியாபார உரிமம் பெற்றவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.


மன்னார் நகர சபை பிரிவில் மரக்கறி வியாபாரம் செய்யாத பலர் தற்போது மரக்கறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, தென்பகுதியைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இவர்களுக்கு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள யார் அனுமதியை வழங்கியது என சபையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


எனவே பாஸ் நடை முறைப்படுத்தும் உரிய அதிகாரிகள் மன்னார் நகர சபையின் அனுமதியையும் பெற்று நடை முறைப்படுத்த வேண்டும் எனவும் இவ்விடயத்தில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

 371 total views,  3 views today

Comments

comments

Shares