பிரதான செய்திகள்

அதியுயர்பீடத்தில் நோயாளிகளைத்தவிர ஆரோக்கியமானவர்கள் உள்ளார்களா ?

முகம்மத் இக்பால்

சுகயீனம் காரணமாக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நடைபெற்ற அதியுயர்பீட கூட்டத்துக்கு சமூகமளிக்கவில்லை என்று தலைவர் திருவாய் மலர்ந்துள்ளார்.

உடல், உள ஆரோக்கியம் உள்ளவர்களையும்,  நல்ல சமூக சிந்தனையாளர்களையும், தியாக மனப்பான்மை உள்ளவர்களையும் அதியுயர்பீடத்தில் இணைத்திருந்தால் தலைவரின் கருத்தை ஏற்றிருக்கலாம். ஆனால் இன்று அதியுயர்பீடத்தில் இருக்கின்ற அதிகமானவர்கள் நோயாளிகள் என்பது எத்தனைபேருக்கு தெரியும்.

பலர் நேற்று நோயுடனேயே அதியுயர்பீட கூட்டத்தில் கலந்துகொண்டனர். நான் கூறுவது உடல் நோயினை மட்டுமல்ல. அதாவது சிலர் வயது முதிர்ந்து நிமிர்ந்து நடக்கமுடியாத தள்ளாடும் நிலையிலும், இன்னும் பலர் இதயத்திலும், மனதிலும் கொடிய நோயுடனும் காணப்படுகின்றனர். இந்த நோயினை அவர்கள் மரணிக்கும்வரைக்கும் குணப்படுத்த முடியாது.

எனவே சூரியன் மேற்கில் உதித்தாலும் உதிக்குமே தவிர, உடல், உள ஆரோக்கியம் உள்ள நல்ல சமூக சிந்தனையாளர்கள் எவரையும் அதியுயர்பீடத்தில் தலைவர் இணைக்கப்போவதில்லை என்பதை மட்டும் உறுதியாக கூறமுடியும்.

எனவே மூன்று பேருக்கு மாத்திரம் நோய் உள்ளது என்பதனை என்னால் ஏற்க முடியாது.

Related posts

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் – தமிழக முதலமைச்சர் மு . க .ஸ்டாளின்

Maash

ஊரடங்கு சட்டம் தொடர்பான மறுஅறிவித்தல்

wpengine

நல்லாட்சியில் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் உயர்த்தப்படலாம்.

wpengine