செய்திகள்பிரதான செய்திகள்

அதிகம் பேசப்படும் கைவிடப்பட்ட சிசு – தத்தெடுக்க 1,000 க்கும் மேற்பட்டவர்கள் போட்டி…!!!

குருநாகல், பரகஹதெனிய – சிங்கபுர பகுதியில் வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவை தத்தெடுக்க, 1,000க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து பல அழைப்புகள் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையைத் தத்தெடுப்பது குறித்து விசாரித்த அனைவருக்கும், தத்தெடுப்பு செயல்பாட்டில் உள்ள சட்ட நடைமுறைகள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் குழந்தையின் தாய் யார் என்பது குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

பண்டைய காலந்தொட்டு உலக சமுதாயம் பலவற்றாலும் கொண்டாடப்பட்ட ஒரு விழா -மஹிந்த

wpengine

5000 ரூபா பணம் கொடுத்து உதவி செய்த கே.காதர் மஸ்தான் (பா.உ)

wpengine

12 மில்லியன் மின்சாரக் கட்டணம் நிலுவையில் உள்ள அமைச்சர்! வெள்ளவத்தையில் சண்டித்தனம்.

wpengine