பிரதான செய்திகள்

அதாவுல்லாஹ், சாபிஸ் மோதல் உச்சகட்டம் அடைந்துள்ளது

முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான அதாவுல்லாஹ்வுக்கும் அக்கட்சியின் உறுப்பினருமான சபீஸுக்குமிடையிலான நேரடி மோதல் ஆரம்பித்ததை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக கடந்த வாரம் அதாவுல்லாஹ்வின் பாதைகள் எறிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இதனை சபீஸ் நிராகரித்து பேசியதை அவதானிக்க முடிந்தது.

 

 
ஆனாலும், சபீஸுக்கும் அதாவுல்லாஹ்வுக்குமிடையிலான உள் கட்சி மோதல் ஆரம்பித்ததை நாம் அவதானிக்கின்றோம். அதேவேளை கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் சபீஸ் வெற்றிபெற்று மேயர் பதவி கிடைக்கும் என இருந்தாலும், அதாவுல்லாஹ்வின் மகன் சகிக்கு வழங்கப்பட்டது. அதனை அறிந்த சபீஸ் அதாவுல்லாஹ்வுடன் மோதல் ஆரம்பித்துள்ளார்.

 

 
இதனைத்தொடர்ந்து இன்று (22) தினக்குரல் பத்திரிகையில் அதாவுல்லாஹ், சபீஸ் ஆகியோருக்கிடையிலான மோதல் தொடர்பிலான செய்தியொன்று வெளிவந்துள்ளது. குறித்த செய்தியில் ‘முன்னாள் அமைச்சர் அதாவுக்லாஹ் மேயர், பிரதிமேயர் பெயர்களை அறிவிப்பதில் அதாவுல்லாஹ் நேர்மையாக நடக்கவில்லை’ எனவும் மேயர் அறிவிப்புக்களில் முறையான முறை அதாவுல்லாஹ் அறிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார். 

 
மேலும்‘அக்கறைப்பற்று மாநாகர சபைக்கான மேயர் பதவியினை சுழற்சி முறையில் பகிர்ந்தளிக்கவும் எனக்கு குறித்த காலப்பகுதிக்கு அந்த பதவியை வழங்கவுள்ளதாகவும் என்னிடம் அதாவுல்லாஹ் கூறினார். அப்போது அவர் எனக்கு வழங்குவதாகக் கூறிய காலப்பகுதி போதாது என்று நான் தெரிவித்தேன். அதேவேளை மேயர் பதவியை எனக்கு எப்போது வழங்குவீர்கள் எனவும் அவரிடம் வினவினேன். அதற்கு மற்றவர்களுடன் பேசிவிட்டு என்னிடம் பேசுவதாக தலைவர் உறுதியளித்தார்’ என்று அதாவுல்லா சபிசுக்கு இடையிலான மோதல் உச்சகட்டம் அடைந்ததை அவதானிக்க முடித்துள்ளது

Related posts

இன்று முதல் பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு.!

Maash

பேஸ்புக்,வட்அப்,வைபர் சமூகவலை தளத்திற்கு எதிராக தண்டனை

wpengine

சமஷ்டி என்ற பேச்சுக்கே தயாரில்லை! அமைச்சர் மஹிந்த சமரசிங்க

wpengine