உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அண்ணாசாலையில் திடீர் பள்ளம் – கார், பஸ் கவிழ்ந்து விபத்து ( படங்கள்)

சென்னை அண்ணாசாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே அண்ணாசதுக்கத்திலிருந்து வடபழனி நோக்கி சென்ற 25ஜி பேருந்து, சாலையில்  திடீரென தோன்றிய பெரிய பள்ளத்திற்குள் சென்றது.  பேருந்தின் பாதி அளவு பள்ளத்திற்குள் சென்றது.   பேருந்துடன் கார் ஒன்றும் பள்ளத்திற்குள் சென்றது.

இதனால் பயணிகள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர்.  இந்த சம்பவத்தில் டிரைவர் உள்பட 10க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.   காரில் வந்தவர் சென்னை மேற்கு முகப்பேரை சேர்ந்த மருத்துவர் பிரதீப் என்பது தெரியவந்துள்ளது.

மெட்ரோ ரயில் சுரங்கப்பணி நடைப்பெற்று வருவதால் சாலையில் இந்த திடீர்ப்பள்ளம் ஏற்பட்டுள்ளது.  பேருந்து மற்றும் காரை மீட்கும் முயற்சிகள் நடைப்பெற்று வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து பேருந்தின் டிரைவர் குணசீலன்,  ‘’எப்போதும் போல சர்ச் பார்க் ஸ்கூல் பேருந்து நிலையத்தில் வண்டியை நிறுத்தினேன்.   திடீரென முன் பக்க டயர் பஞ்சர் ஆவது போல இருந்தது.   பேருந்து கீழே இறங்கியதை உணர்ந்ததும் அதன் பின்னரே டயர் பஞ்சர் அல்ல, சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது தெரியவந்தது.  பயணிகள் மொத்தம் 35 பேர் இருந்தனர்.  அவர்களுக்கு பெரிதாக காயம் எதுவும் ஏற்படவில்லை.  அருகில் வந்த கார் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் நிலை தடுமாறி பள்ளத்தில் இறங்கியது’’ என்று கூறினார்.

Related posts

பயங்கரவாதம் அல்லது குண்டுத் தாக்குதலுடன் றியாஜ்க்கு தொடர்பில்லை

wpengine

கல்முனை இரவுடன் சாய்ந்தமருதாக மாற்றம்

wpengine

பட்டதாரிகளுக்கு சந்தர்ப்பம்

wpengine