அடுத்த சில மாதங்களுக்குள் ஜப்பானில் தொழில் வாய்ப்பு

இலங்கையில் பாடசாலைகளை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்குள் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட தூதுவர் கட்சுகி கோட்டாராவிடம் தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பு

தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று காலை இலங்கைக்கான ஜப்பானிய தூதரகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட தூதுவர் கட்சுகி கோட்டாரா உள்ளிட்ட ஜப்பானிய மூத்த இராஜதந்திரிகள் குழுவைச் சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் ஜப்பான் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

ஜப்பானில் தற்போது பெரும்பாலான தொழில் வாய்ப்புகள் மொழி கற்ற இளைஞர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் மொழியறிவு இல்லாத இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஜப்பானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பான் மொழி அறிவு தேவையில்லை

அதற்கமைய பாடசாலை படிப்பை பாதியில் நிறுத்திய ஆயிரம் இளைஞர்களுக்கு ஜப்பான் சென்று அந்த மொழியைக் கற்று வேலை வாய்ப்பு பெற்றுத் தர வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு சாதகமாக பதிலளித்த ஜப்பான் தூதரகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட தூதுவர், இலங்கைக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ஜப்பான் எப்போதும் செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தாதியர் துறையில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதில் ஜப்பான் ஆர்வமாக இருப்பதாகவும், ஜப்பானின் வயதான சனத்தொகை அதிகரித்து வரும் நிலையில் இத்துறையில் தொழில் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் கட்சுகி கோட்டாரா குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares