பிரதான செய்திகள்

அடுத்த அரசாங்கத்தில் சட்டத்தரணி அலி சப்றி நீதி அமைச்சர்

பொதுத்தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் நீதியமைச்சராக, ஜனாதிபதியின் கோட்டாபய ராஜபக்சவின் பிரதான சட்ட ஆலோசகரும், அவருக்கு நெருக்கமானவருமான ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்றி நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.


இந்த விடயத்தை முன்னாள் ராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.


நாத்தாண்டிய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில்,

அலி சப்றி புத்தளம் மாவட்டத்தில் எமக்கு பெரும் சக்தியை வழங்கி ஜனாதிபதித் தேர்தலில் எம்முடன் இணைந்து கொண்டார்.


அலி சப்றி தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வருவார். அவருக்கு மிகப் பெரிய அமைச்சு பதவி கிடைக்கும் என நினைக்கின்றேன்.


குறைந்தது அவர் நீதியமைச்சராக நியமிக்கப்படலாம் எனவும் அருந்திக பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கணவன் அழகில்லை மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

wpengine

124 ஓட்டங்களால் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

wpengine

பெரமுன கட்சியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அல்ல

wpengine