பிரதான செய்திகள்

அடம்பன் பாலைக்குளி டிலாசால் விளையாட்டுக் கழகத்திற்கு உதவித்திட்டம்.

மன்னார் அடம்பன் பாலைக்குளி  டிலாசால் விளையாட்டுக்கழகம் தமது உதைபந்தாட்ட அணியின் வீரர்களது பயன்பாட்டிற்காக உதைபந்தாட்ட பாதணிகள் மற்றும் பயிற்சிகளுக்கு பயன்படுத்தும் பாதணிகள் போன்றவற்றை கொள்வனவு செய்து தருமாறு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களிடம் கோரியிருந்த சந்தர்ப்பத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குறித்த கிராமத்தின் விளையாட்டு வீரர்களும், கழகமும் வளர்க்கப்படவேண்டும் என்ற நோக்கோடு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் தனது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து ரூபாய் 50,000 நிதியை ஒதுக்கி குறித்த கழகத்திற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து குறித்த கழகத்தின் தலைவர் பி.நிலாளன் மற்றும் கழக உறுப்பினர்களிடமும் கையளிக்கும் நிகழ்வு 11-12-2016 ஞாயிறு நண்பகல் 12:30 மணியளவில் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் இடம்பெற்றது.

Related posts

20வது திருத்தச் சட்டம்! அமைச்சர்கள் பொம்மைகள் போல் மாறியுள்ளனர்

wpengine

புத்தளத்தின் பல பகுதிகளிலும் வௌ்ளம்: மன்னார் வரையான பிரதான வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது

wpengine

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிக்க பரிந்துரை!

Editor