பிரதான செய்திகள்

அஞ்சல் மூல வாக்குகளுக்கான விண்ணப்பம்எதிர்வரும் 10ஆம் திகதி

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக அரச சுகாதாரத்துறையின் அனைவரும் அஞ்சல் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.


தேர்தலை முன்னெடுக்கும் வகையில் சுகாதாரத்துறை ஒழுங்குவிதிகள் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.


இதனையடுத்து பொதுத்தேர்தலுக்கான புதிய திகதி எதிர்வரும் 8ஆம் திகதியன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


அத்துடன் பொதுத்தேர்தலின்போது ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அவ்வாறு ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்படும்போது அதிகளவானோருக்கான தேவை ஏற்படும்.


இதன்காரணமாகவே சுகாதாரத்துறையினர் அனைவரும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத்தை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கவேண்டும் என்று அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

இந்த அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளன.

wpengine

பயங்கரவாதச் செயல்பாடுகளுடன் தொடர்பில்லை! என் சகோதரனை யாரும் கைது செய்யவுமில்லை

wpengine

சேவை செய்யும் அரசியல்வாதிகளை மக்களே இனங்கண்டு கொள்வர் மன்னார் காக்கையன் குளத்தில் அமைச்சர் ரிஷாட்

wpengine