செய்திகள்பிரதான செய்திகள்

அக்காவின் காதலனால் சீரழிந்த தங்கையின் வாழ்க்கை.

வீட்டில் தனியாக இருந்தபோது, 17 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்த அக்காவின் காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்மீமன வலஹண்டுவ பகுதியைச் சேர்ந்த 25 வயது சந்தேக நபர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவம் என பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் , பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவை காதலித்து வந்நதாக கூறப்படும் நிலையில் சம்பவதினம், பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அக்காவின் காதலன் வந்திருந்தார்.

சிறிது நேரத்தில் அக்காவுடன் வெளியே சென்ற காதலன் திரும்பி வந்து தனது மொபைல் போன் சார்ஜரை மறந்துவிட்டதாகக் கூறி, வீட்டில் தனியாக இருந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

விசாரணையைத் தொடங்கிய பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்தனர், பாதிக்கப்பட்ட சிறுமியை காலி கராப்பிட்டி போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தினர்.

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியதை அடுத்து, சந்தேக நபர் காலி நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

வடக்கு – கிழக்கு மக்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள்-மஹிந்த

wpengine

கிரிக்கெட் விளையாட்டுக்கான பாதணிகளை வழங்கி வைத்த அன்வர்

wpengine

போதை மாத்திரைகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஏத்தாலையில் கைது

wpengine