அக்கரைப்பற்று வலயத்தில் இம் மாத ஆசிரியர் சம்பளம் வழங்கப்படவில்லை! ஆசிரியர்கள் விசனம்

(அபூதனா)

அக்கரைப்பற்று வலயத்தில் ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படவில்லை.வழமையாக 20ம் திகதி சம்பளம் வழங்கபடுவதான் நடைமுறை. மாறாக 20 இல் விடுமுறை வந்தால் 19,18 போன்ற தினங்களில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை அந்த நடவடிக்கை எடுக்கப்படாதையிட்டு ஆசிரியர்கள் விசனமடைந்துள்ளனர்.

பல ஆசிரியர்கள் நேற்றும், இன்றும் வங்கிகளுக்குச் சென்று வாடிய முகத்துடன் தன்னியக்கக் காட்டுடன் வெளியேறியதைக் காணமுடிந்தது.
ஒரு ஆசியர் கருத்துத் தெரிவிக்கையில் இப்படிச்செய்தால் நாம் எப்படி வாழ்க்கை வண்டியை ஓட்டுவது எமது வரவு செலவுத்திட்டமே 20ம் திகதியை மையமாகக்கொண்டே அமைக்கப்பட்டுள்ளது.

முந்நாள் கணக்காளர்களான திரு.இப்ராஹிம்,திரு றிஸ்வி போன்றோர் இவ் விடயத்தில் சிறப்பாகச் செயற்பட்டுள்ளனர். புதிய கணக்காளர் இவ்விடயத்தில் கோட்டைவிட்டு விட்டார் என்றார்.
நல்லாட்சியில் மின்சாரத்தடை ஏற்படுத்தும் ஒரு சதிபோலவே இதனை நாம் நோக்குகிறோம்.இலங்கை ஆசிரியர் சங்க செயலாளரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் கல்வியமைச்சரிடம் இது தொடர்பாக பேசவுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares