பிரதான செய்திகள்

அக்கரைப்பற்று நியாயாதிக்க எல்லைக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கை.

எம்.எஸ்.எம். ஹனீபா

இறக்காமம் பிரதேசத்தை அம்பாறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையிலிருந்து விடுவித்து, அக்கரைப்பற்று நியாயாதிக்க எல்லைக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.

நீதியமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டம், நீதியமைச்சர் அலி சப்ரி தலைமையில் பாராளுமன்றத்தில் இன்று (08) நடைபெற்றது.

இதில், இறக்காமம் பிரதேசம் அம்பாறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் உள்வாங்கப்பட்டிருப்பது தொடர்பாக நீதியமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேசம் தமிழ் மொழி பேசப்படும் பிரதேசமாகும். இருப்பினும், இது அம்பாறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால், வழக்குகளுக்காக அம்பாறை நீதிமன்றத்துக்கு மக்கள் செல்ல வேண்டிய நிர்ப்பந்தந்தற்கு ஆளாகி உள்ளமை தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மொழி மூல வழக்குகளுக்காக சட்டத்தரணிகளை நாடுதல், முறைப்பாடுகளைக் கையளித்தல், வழக்கு நடவடிக்கைகள் போன்றவற்றில் மொழி தொடர்பான பல இன்னல்களை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த நீதியமைச்சர் அலி சப்ரி, இடமாற்று நடவடிக்கைகளை ஆரம்பித்து விரைவாக இப்பிரச்சினையை  தீர்த்துத் தருவதாக வாக்குறுதியளித்துள்ளதாகவும், முஷாரப் எம்.பி மேலும் தெரிவித்தார்.

Related posts

சகோதரர் ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்படுவார் மஹிந்த

wpengine

வடக்கு,கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைத்தொழில் துறையினை உயர்த்த வேண்டும் மன்னாரில் அமைச்சர் றிஷாட்

wpengine

தேசிய வர்த்தக சந்தைக் கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் றிஷாட்

wpengine