அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரை சந்தித்த குவைட் தூதுக் குழுவினர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, குவைட் தூதுக் குழுவினர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (11-03-2016 ) அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியாடினர்.
இந்த சந்திப்பின் போது
இலங்கைக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்குமிடையிலான உறவு நல்ல முறையில் உள்ள போதும், வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே இடம்பெறுகின்றது எனத் தெரிவித்த அமைச்சர் றிசாத், தொடர்ந்தும் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிக்குமாரும் தூதுக்குழுவினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதன் போது, இலங்கைக்கான குவைட் நாட்டுத் தூதுவர் காண்டீபன் பாலா உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.