பிரதான செய்திகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பதவி தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் பதவி தொடர்பில்
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி அக்கட்சியின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் குருநாகலில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் கட்சிக்கு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. இதன்போது புதிய செயலாளராக
சுபைதீன் ஹாஜியார் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து குறித்த மாநாடு கட்சியின்
யாப்பு விதிகளுக்கு முரணாக கூட்டப்பட்டது எனவும் அதனால் புதிதாக தெரிவு செய்யப்பட்ட
நிர்வாகம் செல்லுபடியற்றது எனவும் உத்தரவிடக்கோரி மக்கள் காங்கிரசின் முன்னாள் செயலாளர்
நாயகமான வை.எல்.எஸ்.ஹமீட், கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு இன்று புதன்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி குறித்த வழக்கினை எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கின் பிரதிவாதிகளாக கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன், புதிய செயலாளர் சுபைதீன் ஹாஜியார் உட்பட 15 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கை : 236 ஓட்டங்களுடன் சகல விக்கட்டுகளும் இழப்பு

wpengine

ரோஹிங்ய முஸ்லிம் தொடர்பாக பொதுபல சேனா ஜனாதிபதிக்கு கடிதம்! சந்திக்க நேரம் கேட்டு

wpengine

வவுனியாவில் மல்வத்து ஓயா திட்டத்தில் 1500 சிங்கள குடும்பங்களை குடியமர்த்த முயட்சி.

Maash