அகதிகள் படும் கஷ்டங்களை தீர்த்து வைப்பது தொடர்பில் யாப்பா – அமைச்சர் றிசாத் பேச்சு

இன்று காலை (22/05/2016) அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, தான் அவதானித்த மக்கள் படும் கஷ்டங்களை அமைச்சரிடம் விவரித்தார்.

பாதிக்கப்பட்ட முகாம்களில் மற்றும் வீடுகளில் தங்கியிருக்கும் அகதிகள் பலருக்கு முறையான நிவாரணங்கள் கிடைக்காமை தொடர்பிலும் அமைச்சர் யாப்பாவிடம் சுட்டிக்காட்டினார்.

பிரதேச செயலகங்கள் இந்த மக்களின் விடயங்களில் நேரடிக் கவனம் செலுத்தும் வகையில் உரிய அதிகாரிகளையும், அலுவலர்களையும் அந்த இடங்களுக்கு அனுப்பிவைத்து நிவாரணப் பணிகளை சீர்படுத்துமாறு வேண்டினார்.18aa6d97-8232-4e13-8373-96cff3aabd1d

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன,மத, பேதமின்றி பணியாற்றுமாறு அதிகாரிகளுக்கு தாம் பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இது தொடர்பில் மேலும் நடவடிக்கை எடுக்குமெனவும் அமைச்சர் யப்பா உறுதியளித்தார்,

இதேவேளை இன்று காலை (22) கொலொன்னாவை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, அதன் பின்னர் கொழும்பு மாவட்ட பா.உ. மறைக்காரின் அலுவலகத்துக்குச் சென்று அங்குள்ள தேவைகள் பற்றி அறிந்துகொண்டதுடன் பா.உ. மறைக்காருடன்   எதிர்கால நடவடிக்கை தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தினார்.4e5542c5-9584-45f1-8cce-d1043d2ff644

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் எதிர்காலக் கல்வி தொடர்பில் எம்.பிக்களான மரைக்கார், முஜிபுர் ரஹ்மான் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர் இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பது என்பது தொடர்பில்  அடுத்தடுத்த சில தினங்களில் அரசியல் முக்கியஸ்தர்கள், .கல்விமான்கள் ஒன்று கூடி முடிவெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

அதன் பின்னர் கொடஹேனா பதியுதீன் மஹ்மூத் கல்லூரி மற்றும் பாத்திமா மகளிர் கல்லூரி முகாம்களுக்குச் சென்று அங்கு  தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து, அவர்களின்  குறைகளையும் கேட்டறிந்து கொண்டதுடன்,  நிவாரணப்  பணியாளர்களுடனும் கலந்தாலோசித்தார்

அமைச்சருடன் டாக்டர்.அனீஸ், முபாரக் மௌலவி, சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹுசைன் பைலா, மக்கள் காங்கிரசின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அமீன் உட்பட பலர் இங்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares